எச்.ராஜாவின் கருத்து பாஜகவின் கருத்து அல்ல: முரளிதர்ராவ்

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (08:08 IST)
நேற்று பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த கருத்தால் கொந்தளித்த திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் எச்.ராஜாவின் உருவப்படத்தை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
 
எச்.ராஜாவின் இந்த கருத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் மறைமுகமாக கண்டித்திருந்தார். இந்த நிலையில் எச்.ராஜா மீது கட்சி மேலிடம் நடவடிக்கை என்ற குரல் ஓங்கி வருகிறது.
 
இந்த நிலையில் இதுகுறித்து பாஜகவின் தேசிய செயலாளர் முரளிதர்ராவ் கூறியபோது, கனிமொழி குறித்த ஹெச்.ராஜாவின் கருத்து பாஜகவின் கருத்தல்ல, அப்படிப்பட்ட கருத்துகள் பாஜகவின் கலாச்சாரமும் கிடையாது என்று கூறினார். ஆனாலும் எச்.ராஜா மீதான நடவடிக்கை குறித்து அவர் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
 
ஏற்கனவே பெரியார் குறித்து சர்ச்சை கருத்தை பதிவு செய்து கட்சியின் மேலிடத்தில் கண்டனம் பெற்ற எச்.ராஜா மீது பிரதமர் இந்தியா திரும்பியவுடன் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்