கொரோனா நெகடிவ்; அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள வசந்தகுமாரின் உடல்!

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (08:25 IST)
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 
 
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று காலை தகவல் வெளியானது.  
 
இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 70 வயதான கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் காலமான தகவல் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
தற்போது வசந்தகுமாரின் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து தி நகர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள், வசந்த் & கோ நிறுவன ஊழியர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் பின்னர் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும். 
 
பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல அஞ்சலி செலுத்த வருபவர்கள் இடைவேளியை கடைபிடிக்க இவரது தி நகர் வீட்டில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இவரது மரணத்தில் உள்ள மற்றொரு சோகம் என்னவெனில் நேற்று காலை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு நெகடிவ் என வந்திருப்பது தான். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்