குழந்தைக் கொலைக்குப் பழி வாங்கியப் பெண் – ஆள் வைத்து காதலன் கொலை !

Webdunia
செவ்வாய், 1 ஜனவரி 2019 (08:05 IST)
திருவண்ணாமலைநயில் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட நாகராஜன் கொலையில் முக்கியக் குற்றவாளியான அவரது முன்னாள் காதலி மஞ்சுளா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், இவரின் மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியினரின் மகன் ரித்தேஷ் சாய்.சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மஞ்சுளா வேலைபார்த்தார்.கொலை செய்யப்பட்ட கார்த்திக்கேயனின் குடும்ப. நண்பர் என கூறப்படுகிறார்.

நாகராஜனுக்கும் மஞ்சுளாவுக்கும் முறை தவறிய உறவு இருந்ததையறிந்த மஞ்சுளாவின் கணவர் கார்த்திக்கேயன் கண்டுபிடித்து கண்டித்துள்ளார். இதனால் உறவை முறித்துக்கொண்டார் மஞ்சுளா. அதனால் கோபமடைந்த நாகராஜன் மஞ்சுளா- கார்த்திக்கேயன் தம்பதியினரின் மகன் ரித்தேஷைக் கடத்திச் சென்று கொலை செய்துள்ளார்.

இந்த கொலை வழக்கில் போலிஸாரால் கைது செய்யப்பட்ட நாகராஜன் 9 மாத சிறை தண்டனைக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்துள்ளார். அதனையடுத்து திருவண்ணாமலையில் உள்ள மொபைல் கடை ஒன்றில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் மஞ்சுளா அனுப்பியக் கூலிப்படையினரால் நாகராஜன் வெட்டிக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

மஞ்சுளா மேல் சந்தேகம் அடைந்த போலிஸார் அவரைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். ஏற்கன்வே நாகராஜனைக் கொலை செய்ய துப்பாக்கி வாங்கிய பிரச்சனையில் போலிஸால் கைது செய்யப்பட்ட மஞ்சுளா ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்