திமுக ஆட்சியில் அதிக தடுப்பூசிகள்- அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (20:34 IST)
திமுக ஆட்சியில் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக  அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் கொரொனா தொற்றுக் குறைந்து வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அதிமுக ஆட்சியில் தடுப்பூசி போடப்பட்டதை விட திமுக ஆட்சியில் தினமும் 1.34 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். கொரோனா குறைந்து வரும் சூழலில் அமைச்சரின் பேச்சு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்