பொறியியல் கலந்தாய்விற்கு 1,64,054 பேர் விண்ணப்பம்: தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தகவல்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (07:40 IST)
பொறியியல் கலந்தாய்வுக்காக இதுவரை 1,64,054  பேர் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது 
 
கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்பு படிக்க மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
இந்த நிலையில் கடந்த ஜூன் 20ஆம் தேதி பொறியியல் விண்ணப்பத்திற்கான பணி தொடங்கிய நிலையில் இதுவரை 1,64,054 பேர் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது
 
மேலும் 1,14,918 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளதாகவும் அதில் 87,446  பேர் சான்றிதழை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்துள்ளனர் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது
 
பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்