குடும்பத் தலைவிகளுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 2,500 உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி, தெலுங்கானாவில் அறிவித்துள்ளார்.
தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இதோ:
1. குடும்பத் தலைவிகளுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 2,500 உதவித் தொகை வழங்கப்படும்
2. சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 500க்கு வழங்கப்படும்.
3. அரசு பேருந்தில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்.
4. தெலுங்கானா தனி மாநில அமைக்க போராடியவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படும்
5. வீடுகட்ட ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
6. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
7. விவசாயிகள், குத்தகை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ15,000 வழங்கப்படும்.
8. விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ12,000 நிதி உதவி வழங்கப்படும்.
மேற்கண்ட வாக்குறுதிகளால் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்