ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்- முன்னாள் முதல்வர்

சனி, 14 அக்டோபர் 2023 (14:03 IST)
அமைச்சர் சந்திர பிரியங்கா  ராஜினாமா விவகாரத்தில், ‘ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி செயல்பட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை உடனடடியாக ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று முன்னாள் முதல்வர்  நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி யூனியனில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திரா பிரியங்கா( 33வயது).

இவர் அங்கு பிரபல அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.

எனவே, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்துறை ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில்,  புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தன் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரங்கசாமிக்கும், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் செல்வம், ‘சந்திரபிரியங்கா 3 நாட்களுக்கு முன்பிருந்தே பதவியில் இருந்து  நீக்கப்பட்டார்' என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 'அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி விலகிய விவகாரத்தில், தனக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் நடந்த உரையாடலை  பொதுவெளியில் கூறி, ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி செயல்பட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை உடனடடியாக ராஜினாமா செய்ய வேண்டும்' என்று முன்னாள் முதல்வர்  நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்