நியூசிலாந்து பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி: பிரதமராகும் எதிர்க்கட்சி தலைவர்..!

ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (08:26 IST)
நியூசிலாந்து நாட்டில் சமீபத்தில்  நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ள எதிர்க்கட்சியாக தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளத். இதனால் எதிர்க்கட்சி தலைவரான கிரிஸ்டோபர் லக்சன் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததால் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். 
 
ஆனால் 9 மாதங்கள் மட்டுமே அவர் பிரதமராக இருந்த நிலையில் நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் தொழிலாளர் கட்சி சார்பில் கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமர் வேட்பாளராகவும், எதிர்க்கட்சி சார்பில் தேசிய கட்சி தலைவர் கிறிஸ்டோபர் லக்சன் வேட்பாளராகவும் போட்டியிட்டனர்
 
இந்தநிலையில் தேர்தல் முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சி 26 சதவீத வாக்குகளும் எதிர்க்கட்சி 40 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளும் பெற்றது. இந்த நிலையில் தேசிய கட்சியின் கிரிஸ்டோபர் லக்சன் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்