அதிமுக - பாமக இடையே பணம் கைமாறியது : புகழேந்தி பகீர் குற்றச்சாட்டு

வெள்ளி, 8 மார்ச் 2019 (20:03 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் கூட்டணி வைத்துள்ளனர். இதில் அதிமுகவில் பாமகா இணைந்ததற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. தற்போது இக்கூட்டணியை தினகரனின் அமமுக கட்சி நிர்வாகி புகழேந்தி விமர்சித்துள்ளார். 
இதுபற்றி அவர் கூறியதாவது:
 
அதில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை பெற்று வந்த பின்னரும் கூட, பாமக தலைவர் ராமதாஸ் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கி தாக்கல் செய்து அவருக்கு மன உளைச்சல் கொடுத்து சிறை தண்டனையும் பெற்றுக் கொடுத்தார்.ஆனால் தற்போது அதிமுக - பாமக இடையே கூட்டணி உருவாகியுள்ளது.
 
எனவே இதுபற்றி தேர்தல் நேரத்தில் ராமதாஸை பற்றி புத்தகம் ஒன்றை எழுதி வெளியிடுவோம்.
 
ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அமமுக சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது இதில் அமமுக கர்நாடக மாநில பொதுச்செயலாளர் புகழேந்தி, நடிகர் ரஞ்சித், சிஆர் சரஸ்வதி, மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்