படம் ப்ளாப் ஆனாலும்; குறையாத நடிகையின் மார்க்கெட்!
வெள்ளி, 8 மார்ச் 2019 (19:30 IST)
நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தேவ். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. ஆனால், இரு மொழிகளும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
தற்போது தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளார். அதேபோல், தெலுங்கிலும் சில படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், அவர் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுவரை ஒரு கோடி ரூபாயை சம்பளமாக வாங்கி வந்த அவர் தற்போது 50 லட்சம் அதிகரித்துள்ளார். இனி அடுத்து கமிட்டாகும் படங்களுக்கும் இதே சம்பளத்தைதான் அவர் கேட்க உள்ளாராம்.
என்னதான் அவர் நடித்த படம் பிளாப் ஆனாலும் அவருக்கு மார்கெட் குறையாததால் இந்த சம்பள உயர்வு என கூறப்படுகிறது.