பெங்களூரு பைங்கிளியான ராஷ்மிகா மந்தானாவை அக்கட தேசமான ஆந்திரா ஆரத்தி எடுத்து வரவேற்றது. கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார். 'இன்கேம், இன்கேம் காவல' என்ற ஒரு பாட்டு மூலம், உலக புகழ் பெற்றார் ராஷ்மிகா மந்தனா.
இப்போது ஆந்திராவில் ராஷ்மிகாவுக்குத்தான் உச்சகட்ட மார்க்கெட். இப்போது இவருக்கு புதிதாக அடித்துள்ள அதிர்ஷ்டம் என்னவென்றால், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ராஷ்மிகா மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். இருக்காதா பின்ன... இனி இன்கேம் இன்கேம் காவல என மகேஷ் பாவுவே கேட்பாரே... இதனால்... சாலே, இதி சாலே என்ற அளவுக்கு சந்தோஷத்தில் இருக்கிறார் ராஷ்மிகா.