ஜூன் 4-க்கு பிறகு மோடி சும்மா தான் இருப்பார்..! நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல்..!!

Senthil Velan
சனி, 1 ஜூன் 2024 (13:51 IST)
ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி சும்மா தான் இருப்பார் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
 
சென்னை  ராஜா அண்ணனாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தப் புகைப்பட கண்காட்சியை பார்க்கும் பொழுது எனக்கு பேசுவதற்கு பேச்சு வரவில்லை என்றும் இதனை பார்க்கும் பொழுது நான் கண் கலங்கினேன் என்றும் தெரிவித்தார். பல்வேறு மனித உருவம் அருகில் கருணாநிதி இருப்பது போல் அவருடைய புகைப்படம் உள்ளதாக குறிப்பிட்ட அவர்,   அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி என்றார்.  
 
கருணாநிதி பின்பற்றிய கொள்கைகள் அனைத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பின்பற்றி வருகிறார்  என்றும் அவர் இன்னும் உயிருடன் இருப்பது போல் இந்த புகைப்படக் கண்காட்சி விளங்குகிறது என்றும் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார். தமிழ்நாட்டில் திமுக வெற்றி பெற்று விட்டது,  இனிமேல் நாங்கள் தமிழ்நாட்டைப் பற்றி கவலை பட மாட்டோம் என்று அவர் கூறினார்.

ALSO READ: தோல்வி பயத்தில் காங்கிரஸ் கட்சி.! கருத்து கணிப்புகளில் பங்கேற்காதது குறித்து அமித் ஷா விமர்சனம்..!!
 
பாஜக தோற்பதற்கு எல்லா விஷயங்களையும் பிரதமர் மோடி செய்துவிட்டார் என்றும் ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி சும்மாதான் இருப்பார் என்றும் அவரையும் இந்த கண்காட்சியை காண அழைக்கலாம் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டலாக பேசினார் .

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்