அரசியலில் இருந்து விலகுகிறாரா கமல்ஹாசன்? – மக்கள் நீதி மய்யம் விளக்கம்!

ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (10:40 IST)
சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது அரசியல் நிலைபாடு குறித்து மநீம விளக்கமளித்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பிய மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் குணமான நிலையில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன் அரசியலில் இருந்து விலக உள்ளதாக ஆங்காங்கே பேசப்பட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் ஏ.ஜி.மவுரியா ” கமல்ஹாசன் தான் உயிரோடு இருக்கும்வரை அரசியலிலும், அரசியல் இருக்கும்வரை மநீம இருக்கும் என்பதை ஏற்கனவே தெளிவாக குறிப்பிட்டுள்ளார். கட்சி தொடங்கியபோது, தன் வாழ்நாள் முழுவதும் அரசியலில் சேவையாற்றிடுவேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் வகுத்த அந்த கொள்கையின்படி இப்போதும் செயல்பட்டு வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்