மனிதநேயம் பற்றி பேசிய மாணவன்! – நேரில் அழைத்து வாழ்த்திய முதல்வர்!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (12:23 IST)
மனிதநேயம் குறித்து பேசி வைரலான மாணவன் அப்துல்கலாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

சமூக வலைதளங்களில் சிறுவர், சிறுமியர் செய்யும் சாகசங்கள், குறும்புகள் குறித்த வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி வைரலாவது வழக்கமாக உள்ளது. தற்போது மனிதநேயம் குறித்து பள்ளி சிறுவன் ஒருவன் பேசும் வீடியோ சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது.

அதை தொடர்ந்து அந்த சிறுவன் அப்துல்கலாம் பல யூட்யூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்துள்ளார். பலரும் சிறுவன் அப்துல்கலாமின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில் மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேசிய அந்த சிறுவனை பெற்றோருடன் நேரில் வரவழைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்