நாளைய அமைச்சரவை கூட்டத்தில் கவனிக்கப்பட வேண்டியவை என்னென்ன??

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (08:14 IST)
தலைமைச் செயலகத்தில் நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் பல்வேறு புதிய புதிய திட்டங்களை அமல் படுத்தி உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் அடுத்த கட்டமாக அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த முக ஸ்டாலின் அவர்கள் முடிவு செய்துள்ளார்.
 
ஆம், நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் காலை இந்த கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது. மேலும், வெள்ளை அறிக்கை குறித்தும், விவசாயத்துக்கான முதலாவது தனி பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனக் தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்