இதை செய்திருந்தால் முதல்வரை பாராட்டியிருப்பேன்: முக ஸ்டாலின்

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (21:09 IST)
பேனர் காரணமாக சென்னையைச் சேர்ந்த சுபஸ்ரீ மரணமடைந்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில் மீண்டும் பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சென்று அனுமதி வாங்கி உள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றம் தவறு செய்துவிட்டதாக தொலைக்காட்சி விவாதங்களில் பேசப்பட்டு வருகிறது

இந்த நிலையில் பேனர் விபத்தில் உயிரிழந்த சிறுமியின் மரணக்குழியின் ஈரம் காயும் முன் அடுத்த கட் அவுட்டுக்கு அனுமதி வாங்கச் சென்றுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாம் என்றும் பேனர் வைக்க காட்டும் வேகத்தையும் அக்கறையையும் மக்கள் பிரச்சினையை தீர்ப்பதில் காட்டியதால் பாராட்டலாம் என்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

அரசியல் கட்சிகளும் நடிகர்களின் ரசிகர்களும் பேனர் வைப்பதை தடுக்க வேண்டிய தமிழக அரசே நீதிமன்றத்திற்கு சென்று பேனர் வைக்க அனுமதி வாங்கி இருப்பது வெட்கக் கேடான ஒன்று என சமூக வலைதள பயனாளிகளும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

பிரதமரும் சீன அதிபரும் கலந்து கொள்ளும் விழாவிற்கு பேனர் வைக்காவிட்டால் என்ன குறைந்துவிடும்? என்றும் நெட்டிசன்கள் ஆவேசமாக கூறி வருகின்றனர். பேனர் விழுந்தால் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் தமிழக அரசு இவ்வாறு செய்திருப்பதும் அதனை உயர்நீதிமன்றம் அனுமதி இருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, என சமூக வலைதள பயனாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்