நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு – மு.க.ஸ்டாலின் உத்தரவு

சனி, 5 ஜூன் 2021 (12:39 IST)
தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மத்திய அரசின் மருத்து நுழைவு தேர்வான நீட் தேர்வு அனுமதிக்கப்பட்ட காலம் முதலே எதிர்கட்சியாக இருந்த திமுக அதை பலமாக எதிர்த்து வந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதை தேர்தல் வாக்குறுதியாக திமுக அளித்திருந்தது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய நீதியரசர் ராஜன் தலைமையிலான குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர் “கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பை இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கும்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்