ஆன்லைன் வகுப்பிலும் ட்ரேஸ் கோட் அவசியம்!? – விதிமுறைகளை உருவாக்கும் 7 பேர் கமிட்டி!

சனி, 5 ஜூன் 2021 (09:25 IST)
தமிழகத்தில் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அமைக்க 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி, கல்லூரிகள் கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழக கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்பில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அமைக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

நேரடி வகுப்புகளை போன்றே ஆன்லைன் வகுப்பிலும் உடை அணிதல், ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க குழு அமைத்தல், வகுப்புகளை முழுவதையும் ரெக்கார்ட் செய்யும் நடவடிக்கை உள்ளிட்டவற்றை இந்த குழு பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்