இப்போ வாங்காதீங்க... தங்கம் விலை ஒரே நாளில் அதிரடி உயர்வு!

சனி, 5 ஜூன் 2021 (11:29 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து  ரூ.36,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240  உயர்ந்து ரூ.36,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.4,615க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 75.50 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 0.80 விலை உயர்ந்து ரூ.76.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்