யாரை ஏமாத்த பாக்குறீங்க? – எடப்பாடியார் அறிவிப்பால் ஸ்டாலின் ஆவேசம்

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (12:19 IST)
காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவித்திருப்பது குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் விவசாயம் அதிகமாக நடந்து வரும் காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என பல அமைப்புகள் நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்த நிலையில் தமிழக அரசு காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. மேலும் இதற்கான சட்டம் விரைவில் இயற்ற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பை விவசாயிகள் மற்றும் மக்கள் இனிப்புகள் அளித்து கொண்டாடினர்.

இந்நிலையில் அரசின் இந்த அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ”காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துவிட்டதாக எடப்பாடி அரசு மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். இப்படி சொல்லும் அரசு ஹைட்ரோ கார்பன் குழாய்களை மூடிவிட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “காவிரி டெல்டாவை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், ஆனால் மத்திய அமைச்சர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்து திமுக எம்.பிக்கள் பேசினால் வாய்திறக்க மறுக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்