தில்லு இருந்தா நேரா பேசுங்க.. பேர் போடாம போஸ்டர் ஒட்டுறாங்க! – ஸ்டாலின் ஆவேசம்!

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (14:57 IST)
தன்னை பற்றி அவதூறாக சிலர் தமிழக முழுவதும் போஸ்டர்கள் ஒட்டுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததாகவ்ய்ம், அதை திமுகவினர் சிலர் கிழித்தபோது அதிமுக போஸ்டரை கிழிப்பதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ள மு.க.ஸ்டாலின் “என்னை விமர்சிப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் பெயரோ, முகவரியோ வெளியிட தெம்பும், திராணியும் இல்லாத சிலர் என்னை இகழ்ந்து தமிழகம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். நேரடியாக விமர்சிக்க அஞ்சி மறைமுகமான செயல்களில் ஈடுபடுகின்றனர்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்