சபாநாயகர் பதவியில் இருந்து தனபாலை நீக்க கோரி தீர்மானம் - மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்

Webdunia
வியாழன், 23 மார்ச் 2017 (11:27 IST)
தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியிலிருந்து தனபாலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.


 

 
கடந்த பிப்ரவரி 18 ம் தேதி தமிழக சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அதில் ஏற்பட்ட ரகளை காரணமாக திமுக எம்.எல்.ஏ.,க்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து எதிர்க்கட்சியினர் இல்லாமல் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
 
இதன் மூலம் சபாநாயகர் தனபால் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக திமுக குற்றம் சாட்டியது. அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவோம் என ஏற்கனவே திமுக தரப்பு கூறியிருந்தது. அதன்படி, இன்று கேள்வி-பதில் நேரம் முடிந்த பின், எதிர்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.கஸ்டாலின், சபாநாயகருக்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவந்தார்.  
 
இதுபற்றி விவாதிக்க வேண்டுமானால் 35 எம்.எல்.ஏக்களின் ஆதரவு போதுமானது. ஆனால், திமுகவிற்கு 89 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். எனவே, இது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.  அதன்பின், வாக்கெடுப்பு நடத்தப்படும். இதில் குறைவான ஓட்டுகள் பெற்றால் சபாநாயகர் தனபாலின்  பறிபோகும். அதேபோல், வாக்கெடுப்பின் போது சபாநாயகராக உள்ள தனபால் அவையில் இருக்கமாட்டார் என்பது  குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்