வீட்டில் இருந்தபடி மீன் வாங்கலாம் ....!மீன்வளத்துறை அமைச்சகம் புதிய திட்டம் !

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (18:49 IST)
சென்னையில் வீட்டில் இருந்து மீன்களை வாங்கும் வகையில், புதிய திட்டத்தை செயல்திட்டத்தை தமிழக  மீன்வளத்துறை அமைச்சகம் செயல்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழக மீன்வளர்ச்சித் துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மீன் அங்காடிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளது.

மேலும், சென்னை நகரத்தில் பொதுமக்கள் வீடுகளுக்கே சென்று மீன் மற்றும் மீன் உணவுகளை விற்பனை செய்திட www.meengal.com என்ற இணையதளம் மற்றும் 044 – 2495 6896  போன்றவை தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சென்னை சாந்தோம், தேனாம்பேட்டை, அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் மீன் அங்காடிகள் மூலம் சுமார் 5கிமீ சுற்றளவிற்கு மக்கல் வீட்டில் இருந்தே மீன்களை வாங்கமுடியும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்