பாசன வாய்க்கல்களின் குறுக்கே வரும் பாலபணிகளை ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்

திங்கள், 8 ஜூலை 2019 (21:12 IST)
தமிழக முதலமைச்சர் எடப்பாடி முதலமைசர் கடந்த 4-ம் தேதி சென்னையில்  தமிழக போக்குவரத்து துறைக்காக 500-புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார்.இதில் கரூர் மணடலத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட திருச்சி-ஈரோடு., திருச்சி-திருப்பூர் - திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து மணப்பாறை வழியாக மதுரை செல்லும் மூன்று பேருந்துகளை  தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் பேருந்து நிலையத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து கரூரை அடுத்த மாயனூர் பகுதியில் உள்ள காவிரியாற்றின் குறுக்கே போக்குவரத்து மேம்பாலத்துடன் கூடிய கதவணையுடன் கூடிய தடுப்பனை உள்ளது.இந்த கதவனையில் இருந்து பாசனத்திற்க்காக 3-கால்வாய்கள் உள்ளது. இந்த மூன்று கால்வாய்களையும் கடக்க ஒருவழி பாதை உள்ள பழைய  போக்குவரத்து பாலம் உள்ளதால் போக்குவரத்திற்கு ஏதுவாக இரு வழிப்பதையுடன் கூடிய புதிய போக்குவரத்து பாலம் ரூபாய் 6-கோடியே 86-லட்சத்தில் கட்ட கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
 
தற்போது அந்த பணிகளை விரைந்து முடிப்பதற்க்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பாலம் கட்டும் இடத்தில் ஆய்வுகள் மேற்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்.தற்போது பாலம் கட்ட பில்லர் அமைப்பதற்க்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
 
இப்பால பணிகளை ஒன்னரை ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டு கொண்டார். இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்