தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கொள்ளவேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
ஞாயிறு, 7 ஜூலை 2019 (18:55 IST)
கரூர் தொழில் வளர்ச்சியில் வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு பல்வேறு தொழில்கள் இருந்த போதும் பஸ்பாடி (பேருந்து கூண்டு)கட்டும் நிறுவனங்கள் கனிசமாக உள்ளது.
ஆயினும் போதிய தொழில் வாய்ப்புகள் இல்லாமல் தொழிலை தொடர்ந்து நடத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த சூழலில் தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு புதிதாக 5-ஆயிரம் பேருந்துகள் வாங்க கடந்த 2-ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டு படிப்படியாக இன்று 4500-பேருந்துகள் வரை தமிழக போக்குவரத்து துறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவ்வாறு புதிதாக வாங்கிய பேருந்துகளில் சுமார் 4-ஆயிரம் பேருந்துகள் கரூரில் உள்ள அரசு மற்றும் தனியார் கூண்டு கட்டும் நிறுவனங்களில் கட்டப்பட்டு உள்ளது.
இதனால் தொழில் வாய்ப்பு இல்லாமல் தவித்த கூண்டு கட்டும் நிறுவனங்கள் புதிதாக தமிழக அரசின் பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் வாய்ப்பு கிடைத்தால் இன்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 5-ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் சார்பாக பாராட்டு விழா கரூரில் உள்ள தனியார் அரங்கில் பஸ்பாடி கட்டும் நிறுவனங்கள் சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கரூரில் உள்ள பஸ்பாடி கட்டுமான நிருவனங்களின் உரிமையாளர்கள்ääஅங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து பாராட்டு தெரிவித்து நினைவு பரிசுகளையும் வழங்கினார்கள்.
விழாவின் நிறைவில் சிறப்புரை நிகழ்த்திய அமைச்சர் விஜயபாஸ்கர் மனித உடலில் உள்ள நாடி நரம்புகளை போலääதமிழகம் முழுவதும் இருக்கும் மக்களை ஒர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு முக்கிய பங்காற்றும் துறையாக தமிழக போக்குவரத்து துறைää லாப நோக்கு இல்லாமல் செயல்பட்டு வருகிறது என்றார்.நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் கழிவறை வசதிக்காகவே ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.
இந்த குறையை போக்க முதல் கட்டமாக நவீன கழிவறை வசதியுடன் கூடிய 40-பேருந்துகளை இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் இயக்கி வருகிறோம் என்ற அவர்ääசுற்று சூழல் மாசு இல்லாத பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதற்க்காக சுமார் 12-ஆயிரம் பேருந்துகளையும் 2-ஆயிரம் எலக்ட்ரிக் பேருந்துகளையும் வாங்க சி 40- என்ற அமைப்புடன் கையெத்து செய்திருக்கிறோம்.அதற்க்கான பணிகள் நடைபெற்று வருகிறது.இது போன்ற பேருந்துகளை அந்த நிறுவனங்களே வடிவமைத்து தரும் என்பதால்ääகரூரில் செயல்பட்டு வரும் பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனங்களுக்கு வேலையில்லாமல் போகும் சூழல் ஏற்படும் என எச்சரித்த அவர்ääஇது போன்ற சூழலுக்கு ஏற்றவாறு தெழில் நுட்பங்களை மேம்படுத்தினால் தான் இந்த தொழிலுக்கு எதிர்காலம் இருக்கும் என்றார்.