கேரளா கொடுக்க முன்வந்த தண்ணீரை வேண்டாம் என தமிழகம் மறுத்தது உண்மையா?

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (21:44 IST)
தமிழகத்தின் தண்ணீர் தேவையை உணர்ந்து தாமாகவே முன்வந்து கேரள முதல்வர் கொடுக்க வந்த தண்ணீரை தமிழக அரசு வேண்டாம் என கூறியதாக கேரள முதல்வர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வரும் நிலையில் இந்த தகவலில் உண்மையில்லை என தமிழக அரசு மறுத்துள்ளது
 
கேரள முதல்வர் தமிழகத்திற்கு ரயில் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் அனுப்பலாமா? என கேட்டதாகவும், இதுகுறித்து தமிழக முதல்வர் தலைமையில் நாளை நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும், நல்ல முடிவினை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
 
கேரள அரசு வழங்க முன்வந்த தண்ணீரை தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டதாக வெளிவந்த தகவல் உண்மையில்லை என்றும், தமிழகத்திற்கு தண்ணீர் தர முன்வந்த கேரள முதல்வருக்கு நன்றி என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்