நடிகர் சங்க தேர்தலில் அரசு தலையிடுமா? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (21:29 IST)
சுமார் 3000 உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்கம் தங்களுக்குள் நிர்வாகிகளை தேர்வு செய்ய ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதுண்டு. இந்த தேர்தலால் பொதுமக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. நடிகர், நடிகையரகளுக்கு நல்லது செய்வதாக சொல்லியே இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
 
ஆனால் இந்த தேர்தலை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இணையாக ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றன. மக்களின் பிரச்சனைகளுக்காக ஒருமுறை கூட முதல்வரையோ, கவர்னரையோ சந்திக்காத விஷால், நடிகர் சங்கத்தின் பிரச்சனைக்கு மட்டும் நேற்று கவர்னரை சந்தித்துள்ளார். அதேபோல் ஐசரிகணேஷ் அணியினரும் இன்று கவர்னரை சந்தித்துள்ளனர்.
 
இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் நேற்று பதிவாளரால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'நடிகர் சங்கம் என்பது ஒரு அமைப்பு, அவர்களின் தேர்தலில் அரசு தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும், பூச்சி முருகன் தான் இதை வைத்து அரசியல் செய்வதாகவும் தெரிவித்தார். 
 
நடிகர் சங்க தேர்தலை நல்லமுறையில் நடத்தி தர வேண்டியது அரசின் கடமை என்று கருணாஸ் கூறியுள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலில் அரசு தலையிடாது என்று அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்