பீகாரில் இருந்து வேலைக்கு வந்தவர்களில் ஆளுநரும் ஒருவர்: அமைச்சர் எ.வ.வேலு

ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:19 IST)
தமிழகத்திலிருந்து யாரும் பீகாரருக்கு யாரும் வேலைக்கு செல்லவில்லை என்றும் பீகாரில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வந்தவர்களில் ஒருவர்தான் தமிழக ஆளுநர் என்றும் அமைச்சர் எ.வ.வேலு பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக ஆளுநர் குறித்து திமுக அமைச்சர்கள், திமுக பிரமுகர்கள், ஏன் முதலமைச்சரே கூட பல சமயம் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இதற்கு கவர்னர் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலடிம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தமிழக அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழ்நாட்டில் இருந்து பீகாருக்கு யாரும் வேலை தேடி செல்வதில்லை என்றும் பீகாரிலிருந்து தான் பலபேர் இங்கு வேலை தேடி வருகின்றனர் என்றும் தெரிவித்தார். தமிழக ஆளுநர் ரவி கூட பீகாரில் இருந்து தான் வந்து உள்ளார் என்று கூறியிருப்பது ஆளுநர் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்