356 பிரிவின் கீழ் ஆட்சியை கலைக்கும் நேரம் வந்துவிட்டது: சுப்பிரமணியன் சுவாமி ட்விட்..!

ஞாயிறு, 18 ஜூன் 2023 (08:07 IST)
356 பிரிவின் கீழ் ஆட்சியை கலைக்கக்கூடிய நேரம் வந்துவிட்டது என மணிப்பூர் நிலவரம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். 
 
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து பதிவு செய்துள்ளார். மணிப்பூர் பாஜக அரசை பதவி நீக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டது என்றும் அரசியல் அமைப்பின் 356 பிரிவின் கீழ் மத்திய ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் அமித்ஷாவை விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்புங்கள் என்றும் அவர் அந்த வீட்டில் பதிவு செய்துள்ளார். 
 
மணிப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த கலவரத்தை இன்னும் மாநிலம் மற்றும் மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்