அரசு விழாக்களில் குடும்பத்தினர் பங்கேற்க சசிகலா அனுமதி முக்கியம்- அமைச்சரின் தடாலடி பேட்டி

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (15:53 IST)
கடந்த குடியரசுதின விழாவில் அப்போதைய முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். சசிகலா குடும்பத்தினர் எவரும் பங்கேற்காத அந்த விழாவில் ஓபிஎஸ் குடும்பத்தினர் கலந்துகொண்டது சசி தரப்பிற்கு எரிச்சலை எற்படுத்தியதாக கூறப்பட்டது.


 

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் கூறுகையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அனுமதி இல்லாமல் ஓபிஎஸ் தனது குடும்பத்தினரை அரசு விழாவில் கலந்துகொள்ள வைத்தது தவறு என்று கூறினார்.  மேலும் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றதால்தான் கட்சி இன்றும் பலமுடன் உள்ளது என்றார்.
 
அடுத்த கட்டுரையில்