தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு !

சனி, 15 ஆகஸ்ட் 2020 (23:54 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,641 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று 127 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,641 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 3,32,105 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 1,179 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 1,15,444 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , நோய்த்தொற்றை குறைக்கும் பொருட்டு, நாளை தமிழகமெங்கும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அதனால் காய்கறி, மளிகை, இறைச்சிக்கடைகள், பெட்ரோல் பங்குகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்