எக்ஸாம் எழுதும் மாணவர்களை விட பிஸியாய் டென்ஷனாய் சுழலும் செங்கோட்டையன்!

Webdunia
சனி, 16 மே 2020 (12:43 IST)
10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்தி முடிப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 
 
தமிழகம்  முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்ட சூழலில் ஜூன் மாதம் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தேர்வுகளை பிரச்சனை இல்லாமல் நடத்தி முடிக்க அமைச்சர் செங்கோட்டையன் அரசு ஆலோசித்து பல முயற்சிகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் மாணவர்களுக்கு பேருந்து சேவை வழங்கப்பட்டும் என அறிவித்தார். 
 
பின்னர் மாணவர்கள் அவர் அவர் பள்ளியில் ஒரு அறைக்கு 10 பேர் வீதம் தேர்வுகளை எழுதலாம் என அறிவித்தார். தற்போது வெளியூரில் உள்ள 10ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் 3 நாளுக்கு முன்பே அழைத்து வந்து தனியார் பள்ளி விடுதியில் தங்க வைக்கப்படுவர் என தெரிவித்துள்ளார். 
 
மாணவர்கள் தேர்வுமையம் வருவதற்கு இ-பாஸ் பெற கடிதம் அனுப்பப்படும், ஹால்டிக்கெட் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளதோடு அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் வரும் 21 ஆம் தேதிக்குள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகள் உள்ள மாவட்டங்களுக்கு சென்றுவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்