5 மற்றும் 8 ம் வகுப்புக்கு பொது தேர்வு இப்போ கிடையாது.. ஆனால்?! – அமைச்சர் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (14:25 IST)
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இந்த ஆண்டு முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், இப்போதைக்கு பொது தேர்வுகள் கிடையாது என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்.

தமிழக அரசு தற்போது 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தற்போது அரசு பொது தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் பொருட்டு தொடக்க கல்வி நிலையிலும் பொது தேர்வுகள் வைக்கப்பட இருப்பதாக அறிவித்தது அரசு. அதன்படி நடப்பு ஆண்டிலிருந்து 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த இருப்பதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து பல்வேறு சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் உண்டாகின. பல்வேறு எதிர்கட்சிகள், கல்வியியல் வல்லுனர்கள் இதுகுறித்து கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் நடப்பு ஆண்டில் உடனடியாக இதை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் இருப்பதாக பள்ளி கல்வித்துறையும் அமைச்சருக்கு அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தி வெளியிட்டுள்ள அமைச்சர் செங்கோட்டையன் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு அடுத்த 3 ஆண்டுகள் வரை நடைபெறாது என கூறியுள்ளார். அந்த காலகட்டத்தை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டுமென்றும், அதற்கு ஆசிரியர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்