கடந்த சில ஆண்டுகளாக கோவில்களில் சிலை திருடும் கும்பலை குறி வைத்து பிடித்ததுடன், சிலைகளையும் மீட்டு கொண்டு வந்தவர் ஐபிஎஸ் பொன்.மாணிக்கவேல். தற்போது தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட சிலை கடத்தலை தடுக்க அயராது பாடுப்பட்டு வரும் பொன்.மாணிக்கவேல், தற்போது 37 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட நடராஜர் சிலையை ஆஸ்திரேலியா சென்று மீட்டு கொண்டு வந்துள்ளார்.
இந்த சிலைகளை மீட்க மிகவும் கஷ்டப்பட்டுள்ளோம். ஆஸ்திரேலியாவிலிருந்து டெல்லியில் இறங்கினோம். டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வர கூட பணம் இல்லாததால் மூன்று நாட்களாக ரயிலிலேயே பயணித்து வந்து சேர்ந்தோம். பாதுகாப்புக்கு கூட யாரும் இல்லை. சிலைகளை மீட்க பயணிக்கும்போதெல்லாம் எனது ஓய்வூதியத்தை பயன்படுத்தியே பயணித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.