7 பேர் விடுதலை; குடியரசு தலைவர் முடிவு எடுக்காவிட்டால்..? – சட்டத்துறை அமைச்சர் விளக்கம்!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (10:53 IST)
எழுவர் விருதலை குறித்து குடியரசு தலைவர் முடிவெடுக்காத பட்சத்தில் தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் எழுவர் விடுதலை குறித்து கோரிக்கைகள் அதிகரித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேர் விடுதலையில் குடியரசு தலைவர் முடிவு எடுக்காவிட்டால் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி விரைவில் தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்