இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில தினங்களில் உலக அளவில் அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கேரளா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், தமிழகம், லட்சத்தீவுகள் உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.