பட்டமளிப்பு விழாவில் மீண்டும் பங்கேற்காத அமைச்சர் பொன்முடி: என்ன காரணம்?

புதன், 8 நவம்பர் 2023 (10:36 IST)
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்காமல் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
விடுதலைப் போராட்ட வீரர் சங்கரையாவுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்க ஒப்புதல் வழங்காத ஆளுநரைக் கண்டித்து, மதுரை காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
 இந்த நிலையில் இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொள்ள இருக்கும் நிலையில் இந்த விழாவிலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்காமல் விழாவை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. 
 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்னை  தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில்அமைச்சர் பொன்முடி கலந்து கொள்ளாததை அடுத்து விடுதலைப் போராட்ட வீரர் சங்கரையாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் வரை அவர் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்