புறா போட்டிகளில் வென்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுக வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (21:20 IST)
கரூரில் நடைபெற்ற புறா போட்டிகளில் பரிசுகள் வென்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர் அமரர் வைரப்பெருமாள் அவர்களின் 50-ம் ஆண்டு நினைவு பொன்விழா புறா போட்டி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. கரூர் சுற்று வட்டார பகுதிகளில் புறா வளர்க்கும் ஆர்வலர்களிடையே போட்டி நடைபெற்றன. இந்நிகழ்ச்சியினை கரூர் மாவட்ட அதிமுக நகர செயலாளர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமை ஏற்று துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துறை அமைச்சர் அமைச்சர் நிகழ்ச்சியை தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். சாதாபுறா போட்டிகள் கடந்த ஜூலை மாதம் சாதா புறா பேட்டி 19,20,21 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கர்ணப்புறா போட்டி., 23,24,25 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. சாதா புறா போட்டியில் முதல் பரிசு ரூபாய் 10,000 
கரூரை சேர்ந்த ரமேஷ் இரண்டாவது பரிசு ரூபாய் 7,000 கரூரை சேர்ந்த சங்கர் மூன்றாவது பரிசு ரூபாய் 3,000 கரூரை சேர்ந்த ஜெகன் ஆகியோரும் கர்ணா புறா போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று கரூரை சேர்ந்த மோகன் ரூபாய் 25,000 இப்போட்டியில் பரிசு பெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பரிசுகள் வழங்கி பாராட்டினார் இந்நிகழ்ச்சியில் புறா வளர்க்கும் ஆர்வலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்