சென்னையில் மீண்டும் ஏசி பேருந்துகள்: அமைச்சர் தகவல்

சனி, 23 பிப்ரவரி 2019 (11:13 IST)
கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னையில் ஏசி பேருந்துகள் மாநகர பேருந்துகளாக இயங்கியது. கட்டணம் கொஞ்சம் அதிகம் இருந்தாலும் கோடை காலத்தில் இந்த பேருந்துகளில் பயணம் செய்வது ஒரு சுகமான அனுபவங்களாக பயணிகளுக்கு இருந்தது.
 
ஆனால் இந்த பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டு பின் சில மாதங்கள் வெளியூர் பேருந்துகளாக இயங்கின. தற்போது அதுவும் இல்லை. ஏசி பேருந்துகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை
 
இந்த நிலையில் சென்னையில் மீண்டும் ஏசி பேருந்துகளை இயக்க அரசு திட்ட்மிட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
 
இன்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், 'விரைவில் 3+2 இருக்கை வசதியுடன் 100 குளிர்சாதன வசதி பேருந்துகள் இயக்கப்படும் என்றும், அவற்றில் 50 குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் சென்னை மாநகரத்தில் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
தற்போது மெட்ரோ ரயில் சென்னையின் முக்கிய பகுதிகளில் இயங்கி வரும் நிலையில் ஏசி பேருந்துகள் வந்தால் மக்களின் வரவேற்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்