விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்..!

வியாழன், 23 நவம்பர் 2023 (08:09 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
விஜயகாந்த் மார்பு சளி மற்றும் இடைவிடாத இருமல் காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐந்தாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

விஜயகாந்த் உடல் உபாதைகள் காரணமாக அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்  அவரது உடல்நிலை தற்போது படிப்படியாக தேறி வருவதாகவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். இருப்பினும் அவருக்கு அவ்வப்போது  செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும்  தேவைப்படும்போது ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ நிர்வாகிகளிடம் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்

 விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை என தேமுதிக அறிக்கை கூறிய நிலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்