எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் காசா, இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்: எலான் மஸ்க்

புதன், 22 நவம்பர் 2023 (16:11 IST)
எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் காசா மற்றும் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்

இஸ்ரேல் மற்றும் காசாவில் போர் நடந்து வரும் நிலையில் அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். மருத்துவ வசதி கூட கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில் எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.  

எலான் மாஸ் கொடுக்க போகும் பணத்தை வைத்து காசா மற்றும் இஸ்ரேல் பகுதியில் உள்ள பள்ளிகள் மருத்துவமனை ஆகியவற்றுக்கு செலவழிக்கப்படும் என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில் பிணைக் கைதிகளை விடுவிக்க நான்கு நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்