சுகாதார ஆய்வாளர்கள் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பெண்… அதிர்ச்சி சம்பவம்..!
திங்கள், 20 நவம்பர் 2023 (18:45 IST)
நடைபாதையில் வியாபாரம் செய்த பெண்ணின் கடையை காலி செய்ய முயன்ற சுகாதார ஆய்வாளர் மீது அந்த பெண் சூடான பாலை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா என்ற பகுதியில் பெண் ஒருவர் நடை பாதையை மறித்து டீக்கடை நடத்தி வந்தார். அந்த கடையை அகற்றுமாறு சுகாதார அதிகாரிகள் கூறிய நிலையில் அந்த பெண் கடையை அகற்ற மறுத்தார்.
இதையடுத்து சுகாதார அதிகாரி கடையை காலி செய்ய முயன்ற போது கோபமடைந்த பெண் அங்கிருந்த கொதிக்கும் பாலை எடுத்து அதிகாரி மீது ஊற்றினார். இதனால் அதிகாரி படுகாயம் அடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இதனை அடுத்து கொதிக்கும் பாலை ஊற்றிய பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.