கொரோனா கால செவிலியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் பணி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (20:09 IST)
கொரோனா கால செவிலியர்களுக்கு அவரவர் மாவட்டங்களில் பணி கொடுக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
பணி நிரந்தரம் கோரி கடந்த சில நாட்களாக போராட்டம் செய்து வரும் செவிலியர்கள் இன்று சென்னை எழும்பூரில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடத்தும் முயன்றனர் 
இதனை அடுத்து அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் சுமார் 2000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் மாவட்ட சுகாதார அமைப்பின் மூலம் பணி வழங்கப்படும் என்றும் அவரவர் மாவட்டங்களில் பணி நியமனம் பெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்