பட்டபெயர் வைப்பதை நிறுத்துங்க.. இல்லாட்டி நாங்களும் வைப்போம்! – ஸ்டாலினுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (11:44 IST)
ஸ்டாலின் அமைச்சர்களுக்கு பட்டபெயர் வைத்தால் நாங்களும் பதிலுக்கு பெயர் வைப்போம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின் மேடைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை “ஊழல் நாயகன்” என குறிப்பிட்டு பேசுவது அதிமுகவினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று பொங்கல் பை தொகுப்பு வழக்கும் விழாவை தொடங்கி வைத்து பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ”ஸ்டாலின் அமைச்சர்களுக்கு பெயர் வைத்து வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் நிறுத்தாவிட்டால் பதிலுக்கு நாங்களும் பெயர் வைப்போம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்