இந்த விளையாட்டு பேராவது தெரியுமா? ஆம்ஸ்ஸு.. தூம்ஸ்ஸு..! – கபடியில் களமிறங்கிய ஜெயக்குமார்!
திங்கள், 22 மார்ச் 2021 (10:16 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் இளைஞர்களுடன் கபடி விளையாடிய வீடியோ வைரலாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் ராயப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமாரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அமைச்சர்களிலேயே ஜாலியான அமைச்சராக அறியப்படும் ஜெயக்குமார் விழாக்களில் எம்.ஜி.ஆர் பாடலை மேடையில் பாடுவது, குத்துச்சண்டை வீரர்களோடு குஸ்தி போடுவது என குறும்பாக செய்யும் பல விசயங்கள் இதற்கு முன் வைரலாகியுள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் ராயப்பேட்டை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார் அங்கு நடைபெற்ற கபடி விளையாட்டில் கலந்துக் கொண்டார். வேட்டி சட்டையோடு களத்தில் இறங்கி கபாடி பாடி அவர் விளையாடும் வீடியோ வைரலாகியுள்ளது.