அதன்படி, கோவில்களுக்கு வரும் பக்தர்கள், மற்றும் கோவில் ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். கோவில் வளாகங்களில் சானிட்டைசர், கிருமி நாசினி கை கழுவ வைக்கவேண்டும்
கோவில்களில் பக்தர்கள் தேங்காய், பூ, பழம் கொண்டு அர்ச்சனை செய்வது, மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம், துளசி நீர் தருவது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டுகோள்.
இதுதவிர திருவிழா நடந்து வரும் கோவில்களில் மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை, சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளோடு ஆலோசனை செய்து பாதுகாப்பான முறையில் திருவிழாவை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.