அப்போது கூட்டத்தில் இருந்த மாணவர்கள் சிலர் “ஐயா.. இந்த தடவை 12வது ஆல் பாஸ் போடுங்க” என கேட்க அதுகுறித்து முதல்வருடன் கண்டிப்பாக ஆலோசிப்பதாக ஓபிஎஸ் வாக்குறுதி அளித்தார். அப்போது இன்னொரு இளைஞர் கூட்டம் “ஐயா.. விளையாட மைதானம் கட்டி தாங்க” என கேட்க, சிரித்துக் கொண்டே “கண்டிப்பாக செய்து தருகிறேன். சமயம் பாத்து அடிக்கிறீங்களேப்பா” என கூறி சென்றுள்ளார் ஓபிஎஸ்.