மதுரையில் 10ஆம் வகுப்பு மாணவன் கையில் துப்பாக்கி.. அதன்பின் நடந்த விபரீதம்..!

Mahendran

புதன், 15 அக்டோபர் 2025 (10:12 IST)
மதுரை, சம்பக்குளம் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு 10-ம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தனியார் வங்கி அதிகாரியின் மகனான யுவன்  மேலூர் பள்ளியில் படித்து வந்ததுடன், தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் பங்கேற்று பயிற்சி பெற்று வந்தார்.
 
நேற்று காலையில் பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, பெற்றோர் கோயிலுக்கு சென்றபோது யுவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, பயிற்சியில் பயன்படுத்தப்படும் ஏர்கன் துப்பாக்கியை எடுத்து யுவன் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
 
மாலை வீடு திரும்பிய பெற்றோர், மகனின் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் அளித்தனர். கே.புதூர் காவல்துறையினர் யுவனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்