தான் இறந்தால் எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை பார்க்க திரைப்பட பாணியில் பீகாரை சேர்ந்த நபர் செய்த சம்பவம் வைரலாகியுள்ளது.
பிறக்கும் எல்லாரும் ஒருநாள் இறக்கதான் செய்கிறோம். அவ்வாறு இறக்கும்போது நம்மை சுற்றி எத்தனை பேர் இருப்பார்கள், நமக்காக எவ்வளவு பேர் அழுவார்கள் என்ற எண்ணம் எப்போதும் பலருக்கும் இருப்பது உண்டு. அதை சோதித்து பார்க்க திரைப்பட பாணியில் ஒரு திட்டம் போட்டுள்ளார் முன்னாள் விமானப்படை வீரர் ஒருவர்.
சரத்குமார், பிரகாஷ்ராஜ் நடித்த ஐயா திரைப்படத்தில் தான் செத்தால் யாரெல்லாம் வருகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள செத்த பிணம் போல பிரகாஷ் ராஜ் நடிப்பார். அதுபோல பீகாரை சேர்ந்த முன்னாள் விமானப்படை வீரரான மோகன்லால் என்பவர் இறந்தது போல நடித்துள்ளார். அவர் இறந்து விட்டதாகவே நம்பி அவருக்கு இறுதி சடங்குகள் செய்து, அவரை சுடுகாட்டிற்கு எரிப்பதற்காக கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு திடீரென எழுந்து அமர்ந்த மோகன்லாலை கண்டு மொத்த குடும்பமும், உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் தன் சாவுக்கு எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று பார்ப்பதற்காக தான் இப்படி செய்ததாக மோகன் லால் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் வைரலாகியுள்ளது.
Edit by Prasanth.K