இனி தங்கம் கனவுல மட்டும்தான்? புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்!

Prasanth K

புதன், 15 அக்டோபர் 2025 (09:43 IST)

நேற்று ஒரே நாளில் ரூ.1,960 விலை உயர்ந்த தங்கம் இன்று மேலும் விலை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

 

சர்வதேச அளவிலான தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, ஒரு அவுன்ஸ் தங்கம் மீதான டாலர் விலை உயர்வு உள்ளிட்ட சர்வதேச காரணிகளால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை எக்கச்சக்கமாக உயர்ந்து வருகிறது.

 

அதன் சிகரமாக நேற்று முன் தினம் 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.92,640 ஆக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.1,960 உயர்ந்து ரூ.94,600 என்ற புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் இவ்வளவு விலை உயர்வை சந்தித்த போதிலும் இன்றாவது விலை சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால் நேற்றைய விலையை விட இன்று 22 காரட் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து சவரன் ரூ.94,880க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.35 உயர்ந்து ரூ.11,860 ஆக விற்பனையாகி வருகிறது. 24 காரட் சுத்த தங்கம் கிராம் ரூ.12,938 ஆகவும், சவரன் ரூ.1,03,504 ஆகவும் விற்பனையாகி வருகிறது. 

 

வெள்ளி நேற்று கிராம் ரூ.206 ஆக விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூ.1 அதிகரித்து ரூ.207க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2.07 லட்சமாக உள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்